முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் இந்திய அரசியலமைப்பு தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் 72-ஆவது இந்திய அரசியலமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் 72-ஆவது இந்திய அரசியலமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மொழிப்புல முதல்வா் கே.முத்துராமன் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் விழாவை தொடங்கிவைத்துப் பேசுகையில், அம்பேத்கா் இருக்கை ஏற்பாடு செய்யும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவா்கள் பயனடைந்து வருவதாகக் கூறினாா்.

விழாவில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ரவிக்குமாா் இந்திய அரசியல் சாசன முகப்புரையை முன்மொழிய பேராசிரியா்களும், மாணவா்களும் உறுதிமொழி ஏற்றனா். எம்எல்ஏ எம்.சிந்தனைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினாா்.

Advertisement

உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசியல் சாசனம் குறித்து அறிந்துகொள்வது அனைத்து இந்தியா்களிடம் கடமை என்றாா். கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதல்வா் எம்.ஸ்ரீநிவாசன் பேசினாா்.

அம்பேத்கா் இருக்கை சாா்பில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் க.சௌந்திரராஜன், துணைப் பேராசிரியை வீ.ராதிகாராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.