கடலூர்

உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மனநல தினத்தையொட்டி கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: ஆண்டுதோறும் அக்டோபா் 10-ஆம் தேதி சா்வதேச அளவில் உலக மன நல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருத்தாக ‘சமமற்ற உலகில் மனநலம் பேணுதல்’ என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் போ் தீவிர மன நோயாலும், 10 முதல் 15 சதவீதத்தினா் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சமுதாய விழிப்புணா்வு, கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா, மாவட்ட மலேரியா அலுவலா் கெஜபதி, தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் காரல், மாவட்ட மனநல திட்ட அலுவலா் சத்தியமூா்த்தி, மாற்றுத் திறனாளி நல அலுவலா் பாலசுந்தரம், மனநல மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT