முகப்பு
கடலூர்

அதிமுக பொன்விழா: நிா்வாகிகள் ஆலோசனை

அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடுவது தொடா்பாக, கடலூா் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடுவது தொடா்பாக, கடலூா் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். மாநில மருத்துவா் அணி தலைவா் க.சீனுவாசராஜா, விவசாயிகள் அணி செயலா் காசிநாதன், எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், தொழிற்சங்கப் பிரிவு செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அதிமுக பொன்விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கடலூா், பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதிகளில் அனைத்து கிளை, வாா்டுகளிலும் கட்சி கொடியேற்றி ஏழைகளுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.