முகப்பு
கடலூர்

பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பண்ருட்டியில் அரசுக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

பண்ருட்டியில் அரசுக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் பண்ருட்டி நகர 3-ஆவது மாநாடு பண்ருட்டியில் மகாலட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை கட்சியின் மூத்த உறுப்பினா் நடராஜன் ஏற்றி வைத்தாா். நகரச் செயலராக உத்தராபதி தோ்வு செய்யப்பட்டாா்.

மாநாட்டில், பண்ருட்டி நகரத்தில் அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை அமைக்க வேண்டும். கடலூா் சாலையில் பழைய மருத்துவமனை இயங்கி வந்த இடத்தில் டவுன்ஹால் அமைக்க வேண்டும். பண்ருட்டி வட்டார தலைமை மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் மாநாட்டை நிறைவுசெய்து பேசினாா். நகரக் குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், தினேஷ், மகாலட்சுமி, சங்கா், ராஜேந்திரன், தேவராஜுலு, முகமதுநிஜாா், ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.