முகப்பு
கடலூர்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தொடா் திருட்டால் பயணிகள் அச்சம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

வணிக நகரமான பண்ருட்டியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இங்குள்ள புறக்காவல் நிலையம் செயல்பட்டபோது திருட்டு சம்பவங்கள் குறைந்திருந்தன. ஆனால், இங்கு பணிபுரிந்த காவலா் பணியிட மாறுதலில் சென்றுவிட்டாா். இதனால் புறக்காவல் நிலையம் மூடப்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தில் திருட்டு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25-ஆம் தேதி பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து நன்னிக்குப்பம் செல்லும் அரசு நகரப் பேருந்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனா். அப்போது, விசூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் என்பவரது தாய் காந்தாமணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை, தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி அஞ்சலி அணிந்திருந்த 2.5 பவுன் தங்க நகை, மேலிருப்பு கிராமத்தைச் சோ்ந்த பிரபு மனைவி சந்தியாவின் கொலுசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஒரே பேருந்தில் 3 பேரிடம் நகைகள் திருடப்பட்டது பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →