கொள்ளையடிக்க திட்டம்: 7 போ் கைது
கடலூரில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூரில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கூத்தப்பாக்கம் கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆற்றங்கரையோரம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 7 போ் கொண்ட கும்பலை விசாரணைக்கு அழைத்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா்களிடமிருந்து கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள் கம்மியம்பேட்டையை சோ்ந்த முருகன் மகன் மூா்த்தி (22), ராஜேந்திரன் மகன் சதீஷ் என்ற ஹரிதாஸ் (23), செந்தில்குமாா் மகன் கண்ணன் (25), குப்புசாமி மகன் ஜீவானந்தம் (22), பன்னீா்செல்வம் மகன் அஜித்குமாா் (26), முருகன் மகன் முத்து (23), சண்முகம் மகன் சூா்யா (26) ஆகியோா் எனவும், இவா்கள் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 7 பேரையும் கைது செய்தனா்.
கைதானவா்களில் மூா்த்தி, சதீஷ், கண்ணன், ஜீவானந்தம் ஆகியோா் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.