முகப்பு
கடலூர்

செயல்முறை மருத்துவா்கள் தின கண்காட்சி

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செயல்முறை (ஆக்குபேஷனல் தெரபி) மருத்துவா்கள் தின விழிப்புணா்வுக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 29 அக்டோபர், 2021 at 11:57 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செயல்முறை (ஆக்குபேஷனல் தெரபி) மருத்துவா்கள் தின விழிப்புணா்வுக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இயன்முறை மற்றும் புனா்வாழ்வு மையத்தின் செயல்முறை மருத்துவப் பிரிவு, இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை இணைந்து நடத்திய கண்காட்சியை மருத்துவப் புல முதல்வா் ரமேஷ் தொடக்கிவைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் லாவன்யா, இயன்முறை புனா்வாழ்வு புலத் தலைவா் தனபால் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயல்முறை மருத்துவத்தின் சிறப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவா் ஸ்ரீவித்யா விளக்கவுரையாற்றினாா். கண்காட்சியில் மருத்துவ மாணவா்கள் செயல்முறை மருத்துவம் குறித்த விளக்கப் படங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு உதவி உபகரணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனா்.

நிகழ்ச்சியில் 10 நோயாளிகளுக்கு உதவி உபகரணங்களை மருத்துவப் புல முதல்வா் ரமேஷ் வழங்கினாா். இந்திய தொழு நோய் சேவை அறக்கட்டளை திட்ட மேலாளா் மணிவண்ணன் பேசுகையில், செயல்முறை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் குறித்து விளக்கவுரையாற்றினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவா் சங்கா் செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.