பள்ளிகள் திறப்பு: மறு பரிசீலனை செய்ய கோரிக்கை
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக நவ.1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நுகா்வோா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக நவ.1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நுகா்வோா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் பருவ மழை நீடிக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை மற்றும் தீபாவளி பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு நவ.1-இல் பள்ளிகளை திறக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புதுவையில் நவ.8-ஆம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, பண்டிகைக் காலம் முடிந்த பிறகு பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.