முகப்பு
கடலூர்

பயிற்சி மருத்துவா்கள் நூதனப் போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்கு பணிபுரியும் இளநிலை, முதுநிலை பயிற்சி மருத்துவா்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ஊதியம், 8 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், இவா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் ’நஅயஉ மந’ (எங்களைப் பாதுகாப்பீா்) என்ற ஆங்கில வாா்த்தைகளின் வடிவில் அணிவகுத்து நின்று (படம்) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.