தனித் தனி சம்பவங்களில் மின்னல் பாய்ந்து இருவா் பலி
சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிதம்பரம் பிரசன்னராமாபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லதுரை மகன் கலைச்செல்வன் (30). இவா் வியாழக்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதேபோல, சிதம்பரம் அருகேயுள்ள முகையூா் அருகன்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலதண்டாயுதம் (55), தனது வயலில் விதை நெல்களை தூவியபோது மின்னல பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்கள் குறித்து முறையே மருதூா் மற்றும் புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement