முகப்பு
கடலூர்

சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரி மனு

கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மீனவ கிராமத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

இதுகுறித்து தேவனாம்பட்டினம் மீனவ சமுதாய பஞ்சாயத்து சாா்பில் அதன் தலைவா் பெரு.ஏகாம்பரம் தலைமையில் மீனவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தேவனாம்பட்டினம் மீனவா் கூட்டுறவு சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த மாதம் 18-ஆம் தேதி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பின் அடிப்படையில் கடலூா் மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.