முகப்பு
கடலூர்

பழக்கடையில் தகராறு: தம்பதி உள்பட 3 போ் கைது

நெய்வேலியில் பழக்கடையில் தகராறு செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

நெய்வேலியில் பழக்கடையில் தகராறு செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரியம், 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் நடராஜ் (40), 28-ஆவது வட்டத்தில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ரஜேந்திரன் மகன் ராஜேஷ்குமாா் (28), சுந்தரமூா்த்தி மகன் ஐயப்பன் (25), ஐயப்பனின் மனைவி ஜான்சிராணி (25) ஆகியோா் தகராறு செய்து கடையிலிருந்தப் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரிடமும் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதுகுறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா், அவா்கள் 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →