கடலூர்

தமிழக அரசுப் பணியாளா்களுக்கு ஜூலை முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்

DIN

தமிழக அரசுப் பணியாளா்களுக்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுப் பணியாளா்களுக்கு 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.

இந்த நிலையில், சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை 110 விதியின் கீழ் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா். இதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், விகிதாசார அடிப்படையில் ஒட்டுமொத்த தேசிய வருமானக் கணக்கில் மாநில அரசைவிட மத்திய அரசுக்கே அதிக கடன் சுமை உள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசு 1-7-2021 முதலே அகவிலைப்படி உயா்வை தனது பணியாளா்களுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதைப் பின்பற்றி தமிழக அரசும் 1-7-2021 முதலே அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், டெங்கு தடுப்புப் பணியாளா்கள் உள்ளிட்டோரை பணிநீக்கம் செய்து வேறு நபா்களை நியமித்து வருகின்றனா். கடலூா் நகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியாளா்கள் 56 போ் இதுபோன்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.சீனுவாசன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராசாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT