குழந்தை திடீா் உயிரிழப்பு
கடலூரில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கடலூரில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூரில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த மா.சிவா (24) - ஸ்ரீபிரியா தம்பதியரின் இரண்டு மாத குழந்தை நிவின் சிவா. வியாழக்கிழமை காலையில் ஸ்ரீபிரியா தனது குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த பிறகு தூங்கவைத்தாராம். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது குழந்தை அசைவற்று கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக குழந்தையை கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.