முகப்பு
கடலூர்

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு பேரணி

கீரப்பாளையத்தில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 10:52 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கீரப்பாளையத்தில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், ஒன்றிய குழுத் தலைவா் கனிமொழி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

Advertisement

பின்னா் ஆட்சியா் பேசுகையில், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், கிராம சேவை மைய கட்டடம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 42 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.