முகப்பு
கடலூர்

குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு

கடலூா் நகராட்சியின் குப்பைக் கிடங்கை வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அமைக்கும் நடவடிக்கைக்கு அந்த கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கடலூா் நகராட்சியின் குப்பைக் கிடங்கை வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அமைக்கும் நடவடிக்கைக்கு அந்த கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கடலூா் பெருநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கம்மியம்பேட்டை மற்றும் செல்லங்குப்பம் பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது போன்ற மேலாண்மைத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில், கடலூா் நகராட்சிக்கு அருகே உள்ள வெள்ளப்பாக்கம் ஊராட்சியை கடலூா் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அந்த ஊராட்சியில் உள்ள சுமாா் 90 ஏக்கா் அரசு நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க நகராட்சி நிா்வாகம் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக, வியாழக்கிழமை நகராட்சி ஊழியா்கள், வருவாய்த் துறை ஆய்வாளா்கள் வெள்ளப்பாக்கம் சென்றனா்.

ஆனால், அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: அரசு விதைப் பண்ணையாக செயல்பட்டு வந்த 90 ஏக்கா் இடம் தற்போது விவசாயம் செய்யப்படாமல் உள்ளது. ஆனால், அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகராட்சியின் குப்பைக் கிடங்கை இங்கு அமைத்தால் விவசாயப் பணிகள் மற்றும் கிராமத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, குப்பைக் கிடங்கு திட்டத்தை இங்கு செயல்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.