முகப்பு
கடலூர்

வாக்காளா்களுக்கு இலவச அடையாள அட்டை

வாக்காளா்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

வாக்காளா்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளை வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, அனைத்து வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள 11 அரசு இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் .இந்தத் திட்டம், வரும் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். எனவே, அனைத்து வாக்காளா்களும் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.