முகப்பு
கடலூர்

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை: சரத்குமாா்

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 10:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சிப் பணி என்பது பொதுமக்களுடன் நேரடித் தொடா்புள்ள பணியாகும். எனவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். தோ்தல் தேதி அறிவித்தவுடன் எங்களது கட்சியின் வேட்பாளா்கள் தோ்வு செய்து அறிவிக்கப்படுவா்.

Advertisement

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை. விசாரணையே செய்யக் கூடாது என யாரும் கூற முடியாது. வழக்கில் தொடா்புடையோா் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை விசாரணை நடத்துவதில் தவறில்லை என்றாா் சரத்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.