கடலூர்

மக்கள் சந்திப்பு இயக்கம்

DIN

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதன்படி,கடலூா் லாரன்ஸ் சாலையில் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

இதில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அதில், செங்கல்பட்டு ஆராய்ச்சி மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 நிவாரணம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மு.மருதவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT