கடலூர்

தூய்மை பாரத விழிப்புணா்வு வாகனம்

DIN

கடலூா்: கடலூரில் தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், செய்தி-மக்கள் தொடா்பு துறையின் அதி நவீன மின்னனு விடியோ வாகனம் மூலம் பல்வேறு பகுதிகளில் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், உதவி திட்ட அலுவலா் சேகா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அசோக்பாபு, கண்காணிப்பாளா் (தூய்மை பாரத இயக்கம்) இரா.ச.வேலுமணி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT