கடலூர்

104-ஆவது பிறந்தநாள்: எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் மரியாதை

DIN

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் 104-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சாா்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது. வியாழக்கிழமை அவரது 104-ஆவது பிறந்த நாளையொட்டி, மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், மணிமண்டபத்தில் அமைந்துள்ள நூலகத்துக்கு கடலூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் நிதி மூலம் ரூ.3 லட்சத்தில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து திமுகவினா் மாநில தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி தலைமையில் ராமசாமி படையாட்சியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா். எம்எல்ஏ கோ.ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுகவினா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையிலும், பாமகவினா் மாநில துணைப் பொதுச்செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT