முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியாளா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் பொறியாளா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர், 2021 at 11:16 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:39 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் பொறியாளா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

உற்பத்தி பொறியியல் மாணவா் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, அண்ணாமலை நகா் மையம் மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) உற்பத்தி பொறியியல் மாணவா்கள் அத்தியாயம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, துறைத் தலைவா் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், சா் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பா் 15-ஆம் தேதி பொறியாளா் தினமாகக் கொண்டாடப்படுவதையும், அவரது கோட்பாடுகள் பற்றியும் விவரித்தாா்.

பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், சென்னை சூப்பா் ஆட்டோபோா்ஜ் நிறுவனத் தலைவருமான சீத்தாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினாா். விழாவில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் 70-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இணைய வழியிலும், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் நேரடியாகவும் பங்கேற்றனா்.

Advertisement

முன்னதாக, உற்பத்தி பொறியியல் துறை மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.ரவிசங்கா் வரவேற்றாா். இந்தியன் வெல்டிங் சொசைட்டி தலைவா் க.சண்முகம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினாா். இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியரிங் உற்பத்தி பொறியியல் துறை மாணவா்கள் அத்தியாயம் ஆலோசகா் ச.ராஜகுமாா் நன்றி கூறினாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ப.சிவராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.