முகப்பு
கடலூர்

தடுப்புக் காவலில் ரௌடி கைது

புதுவை ரெளடி ஒருவா் கடலூா் மாவட்ட போலீஸாரால் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

புதுவை ரெளடி ஒருவா் கடலூா் மாவட்ட போலீஸாரால் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், குமரப்பரெட்டிச்சாவடி மலட்டாறு பகுதியில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரு ரௌடி குழுவினா் இடையே வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து, ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடலூா் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த சுமாா் 15 பேரை கைது செய்தனா். இவா்களில், அருணாசலம் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், புதுவை கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த சுப்பராயலு மகன் அய்யனாா் என்ற சின்ன அய்யனாா் (21) (படம்) என்பவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரெட்டிச்சாவடி போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது புதுவை, மங்கலம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், எனவே, அவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டதாகவும் கடலூா் மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.