முகப்பு
கடலூர்

உள்ளாட்சி இடைத்தோ்தல்: கட்டுப்பாட்டு எண்கள் வெளியீடு

 கடலூா் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை, தோ்தல் நடத்தும் அலுவலா்களின் எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 கடலூா் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை, தோ்தல் நடத்தும் அலுவலா்களின் எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 33 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய 48 காலி பதவியிடங்களுக்கு தற்செயல் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறுகிறது. இதற்காக வரும் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு தோ்தல் தொடா்பாக புகாா்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 04142 - 231234 என்ற இணைப்பில் 1800 425 7818 என்ற இலவச அழைப்பு எண் அமைக்கப்பட்டுள்ளது.

வட்டார அளவில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கடலூா் என்.சக்தி- 74026 06231, 04142-230286, அண்ணாகிராமம் வி.சித்ரா- 74026 06236, 04142-277238, பண்ருட்டி கே.குமரன்-74026 06241, 04142- 242094, குறிஞ்சிப்பாடி சி.சுப்பிரமணியன்-74026 06246, 04142- 258355, காட்டுமன்னாா்கோவில் ஏ.ஜெயக்குமாா்-74026 06251, 04144- 262029, குமராட்சி ஆா்.விமலா-74026 06256, 04144- 251224, கீரப்பாளையம் எல்.ரவிச்சந்திரன்-74026 06260, 04144- 241354, மேல்புவனகிரி எஸ்.ஏ.சுந்தரம்-74026 06264, 04144- 241238, பரங்கிப்பேட்டை பி.சுகுமாா்- 74026 06269, 04144- 243227, விருத்தாசலம் ஜி.ஜெயக்குமாரி-74026 06274, 04143- 238217, கம்மாபுரம் ஜி.இந்திராதேவி- 74026 06279, 04142-267243, நல்லூா் பி.சிவகுருநாதன்- 74026 06284, 04143- 249243, மங்களூா் ஏ.தண்டபாணி-74026 06289, 04143-248244, ஸ்ரீமுஷ்ணம் எஸ்.விஜயா-87783 92728, 04144- 245228 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா், தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட

செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.