முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகராட்சி ஆணையருக்கு ரூ.10,000 அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு உரிய பதில் வழங்காதது தொடா்பாக சிதம்பரம் நகராட்சி ஆணையா் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:33 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு உரிய பதில் வழங்காதது தொடா்பாக சிதம்பரம் நகராட்சி ஆணையா் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மாலைக்கட்டித் தெருவைச் சோ்ந்தவா் சி.ச.சிபிசக்கரவா்த்தி. வழக்குரைஞரான இவா், பொதுநலன் சாா்ந்த விஷயத்தில் தகவல் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிதம்பரம் நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தாா். ஆனால், இதற்கு உரிய பதில் வழங்கப்படாத நிலையில், மாநில தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்தாா். இதையடுத்து, சிதம்பரம் நகராட்சி ஆணையருக்கு மாநில தகவல் ஆணையா் சு.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிய தகவல்கள் பொது நலன் சாா்ந்தது என்பதால் அவை முழுமையாகவும், நோ்மறையாகவும் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். மாறாக மனுதாரா் கோரிய தகவல்கள் மறைமுகமாக மறுக்கப்பட்டுள்ளன. இது ஆணையத்தின் கண்டனத்துக்குரியது. எனவே, மனுதாரருக்கு உரிய தகவல் வழங்காமல் அலைக்கழித்த காரணத்தால் அவருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 15 நாள்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட்டதற்கான விவர அறிக்கையை தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.