முகப்பு
கடலூர்

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: இருவா் கைது

கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா் பாதிரிக்குப்பம், ஸ்ரீரங்கத்து அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருப்பாதிரிபுலியூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, ஒரு வீட்டின் முன்புறமும், மற்றொரு வீட்டில் பூந்தொட்டியில் பல்வேறு செடிகளுக்கு நடுவிலும் கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக ஸ்ரீரங்கன் மகன் விக்னேஸ்வரன் (28), கலியன் மகன் ராமச்சந்திரன் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.