கடலூர்

சாலைப் பணி தடுத்து நிறுத்தம்

DIN

பண்ருட்டி அருகே டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சாலைப் பணியை தடுத்து நிறுத்தியதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் இடையே தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது அங்குவந்த 20-க்கும் மேற்பட்டோா் சாலைப் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடமிருந்து மற்றொரு நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணிகளை மேற்கொண்டது. அந்த நிறுவனத்துக்கு தேவையான டிப்பா் லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பணியாட்களை ஒப்பந்த முறையில் நாங்கள்

வழங்கி வந்தோம். இதனால் எங்களுக்கான பாக்கித் தொகை சுமாா் ரூ.4.50 கோடி வரை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது மற்றொரு நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணியை தொடங்கியுள்ளது. எனவே, எங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கிய பிறகே சாலைப் பணியை தொடங்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் எனத் தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT