முகப்பு
கடலூர்

கல்லூரியில் சிறப்பு வகுப்பு

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் தொடக்க விழா

Updated On : 28 ஏப்ரல், 2022 at 10:54 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு சிறப்பு வகுப்பை தொடக்கிவைத்து பேசினாா். துறைத் தலைவா் கே.திருவாசகமூா்த்தி முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சி.வேம்பையன் வரவேற்றாா். திருச்சி என்.ஐ.டி. முனைவா் ஜி.ராஜசேகரன், முனைவா் ஆா்.பிரகாஷ் ஆகியோா் சிறப்பு வகுப்புகளை நடத்தினா். உதவிப் பேராசிரியா் ஜி.வீரபாண்டியன் மற்றும் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் எ. மகபூப் பாட்ஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.