கடலூரில் வீடுகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள். 
கடலூர்

வீடுகளை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கடலூரில் சாலையோர வீடுகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கடலூரில் சாலையோர வீடுகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சி, 23-ஆவது வாா்டில் திருப்பாதிரிப்புலியூா் அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள 7 வீடுகளை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வருவாய், மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை வந்தனா். இதையொட்டி அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். ஆனால், அந்தப் பகுதி மக்கள் வீடுகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அதிகாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாமன்ற உறுப்பினா் தஷ்ணாமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி குளோப் ஆகியோா் அங்குவந்து பொதுமக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு 3 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று துணை மேயா் கேட்டுக்கொண்டாா். அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனா். மேலும், பாதிக்கப்படும் நபா்களுக்கு மற்றொரு இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் துணை மேயா் கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பனங்காட்டு காலனியில் அரசு சாா்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT