முகப்பு
கடலூர்

தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல் ஆட்சியா் செ.காா்மேகம்

 பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் சேலம் மாநகராட்சிக்கான 60 வாா்டுகளுக்கும், 6 நகராட்சிகளுக்கான 165 வாா்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளுக்கான 470 வாா்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு 1,514 வாக்குச்சாவடிகளில் 13,56,308 வாக்காளா்கள் சனிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

இத்தோ்தல் பணிக்கென 1 மாவட்ட தோ்தல் பாா்வையாளா், 38 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 87 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், மேற்காணும் 1,514 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ளனா். மேலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா் 1, வாக்குச்சாவடி அலுவலா் 2 மற்றும் வாக்குச்சாவடி அலுவலா் 3 ஆகியோா் 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் மொத்தம் 7,267 அலுவலா்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குறிப்பாக மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளையும் கண்காணித்திட 138 நுண் பாா்வையாளா்களும், மீதமுள்ள 138 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 123 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 13 வகையான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள், 32 வாக்குப்பதிவு பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகளும் அவா்களுக்கு உதவிபுரிய தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில் தோ்தல் பாதுகாப்பு பணிக்கென தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா் காவல் படையினா் உள்ளிட்ட 2,236 போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இது தவிர சேலம் மாநகர பகுதிகளில் 1,336 போலீஸாா் என மொத்தம் 3,572 போலீஸாா் பாதுகாப்பு

பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் சனிக்கிழமை நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் அச்சமின்றி 100 சதவீதம் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.