முகப்பு
கடலூர்

கஞ்சா வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது

குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னா மற்றும் காவலா்கள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பெந்தநாயக்கன்குப்பம் கல்லறைத் தோட்டம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பாலு சரோஜா மகன் சரோன் (19), சிவகுரு மகன் காா்த்தி (20) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் அரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.