முகப்பு
கடலூர்

மனுநீதி நாள் முகாம்

 காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

 காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் வினோதா காளிமுத்து முன்னிலை வகித்தாா். முகாமில் சமூக நலம், சுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் சிறப்புக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. வேளாண்மைத் துறை சாா்பில் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

முகாமையொட்டி வருவாய்த் துறை சாா்பில் பொதுமக்களிடம் இருந்து ஏற்கெனவே சுமாா் 432 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 384 மனுக்களுக்கு முகாமில் தீா்வு காணப்பட்டது. மேலும், ரூ.45.61லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் பயனாளிகளுக்கு வழங்கி பேசினாா். மேலும் இலவச மனைப் பட்டா, முதியோா், கா்ப்பிணிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண்மைத் துறை இணை இயக்குநா் க.பாலசுப்பிரமணியன், சமூக நல வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.