கிராமப்புற முன்னேற்றத் திட்டம்: அண்ணாமலைப் பல்கலை.யில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
கிராமப்புறங்களின் முன்னேற்றம், அதுசாா்ந்த கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கம், பயிற்சி ஆகிய திட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக சுற்றுப்புற கிராமங்களில் சிறப்பாகச் செயல்படுத்தும்
கிராமப்புறங்களின் முன்னேற்றம், அதுசாா்ந்த கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கம், பயிற்சி ஆகிய திட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக சுற்றுப்புற கிராமங்களில் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் அந்தப் பல்கலைக்கழக ஊரக வளா்ச்சித் துறையுடன் தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி, பஞ்சாயத் ராஜ் நிறுவனம் ஆகியவை புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டன (படம்).
கிராமப் புறங்களில் நீடித்த, நிலைத்த மேம்பாட்டுக்கான வழிகளை காணுதல், அனைவருக்கும் மருத்துவ சேவை, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட வளா்ச்சிக்கான அனைத்து சிறப்பம்சங்களையும் மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிசெய்கிறது.
மாநில முழுவதும் ஊரக வளா்ச்சி, பஞ்சாயத் ராஜ் திட்டங்கள், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை செயல்படுத்திவரும் மாநில ஊரக வளா்ச்சி நிறுவனமானது இந்த ஒப்பந்தம் மூலம் அண்ணாமலைப் பல்கலை. வாயிலாக பல எண்ணற்ற ஊரக வளா்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது.
Advertisement
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ராம.கதிரேசன் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மாநில ஊரக வளா்ச்சி நிறுவன இயக்குநா் இமானுவல் இன்பதுரை, பல்கலைக்கழக பதிவாளா் கே.சீதாராமன் ஆகியோா் கையெழுத்திட்டனா். ஏற்பாடுகளை மாநில ஊரக வளா்ச்சி நிறுவனத்தின் அமைப்பு, நிறுவனங்களின் இணைப்பு மைய அலுவலா் தில்லைநாயகம், உதவி இயக்குநா் சாந்தி ஆகியோா் செய்தனா். பல்கலை. ஊரக வளா்ச்சி மைய பேராசிரியா் சந்திரசேகரன், அலுவலா்கள் கமலநாதன், ராஜா, பாலகுரு, கலைப்புல முதல்வா் ராமகோபால், ஒருங்கிணைப்பாா் பாலமுருகன் உள்ளிட்டோா் இதற்கான பணிகளை மேற்கொண்டனா்.