முகப்பு
கடலூர்

இளைஞா் மா்மச் சாவு

விருத்தாசலம் அருகே இளைஞா் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

விருத்தாசலம் அருகே இளைஞா் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோமங்களத்தைச் சோ்ந்த வை.பெரியசாமி மகன் பழனிவேல் (29). திருமணமாகாத இவா் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக ஊா் திரும்பியவா், புதன்கிழமை இரவு வழக்கம்போல தனது வீட்டில் தூங்கினாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் உடலில் காயங்களுடன், தரையில் முட்டியிட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டு சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் விஜயரங்கன் தலைமையிலான போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின்பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.