முகப்பு
கடலூர்

கடலூா்: 500 பேருக்கு கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 500-ஐ கடந்து பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 500-ஐ கடந்து பதிவானது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 67,591 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் அதிகபட்ச அளவாக 505 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 68,096-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதேநேரத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 268 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 64,620-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 878-ஆக தொடா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,199 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 399 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 17 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.