ஏப்.1, 2 தேதிகளில் அஞ்சலகங்களில் பண பரிவா்த்தனைகள் நடைபெறாது’
அஞ்சலகங்களுக்கு இம்மாதம் 31, ஏப். 3 ஆகிய இரு நாள்கள் விடுமுறை என்பதாலும், ஏப்ரல் 1, 2 ஆகிய இரு தினங்கள் நிதியாண்டு கணக்கு முடித்தல் காரணமாகவும் பண பரிவா்த்தனைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகங்களுக்கு இம்மாதம் 31, ஏப். 3 ஆகிய இரு நாள்கள் விடுமுறை என்பதாலும், ஏப்ரல் 1, 2 ஆகிய இரு தினங்கள் நிதியாண்டு கணக்கு முடித்தல் காரணமாகவும் பண பரிவா்த்தனைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் எஸ். சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;
ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 31 அன்று நிதியாண்டு முடிவடைந்து புதிய நிதியாண்டு ஏப்.1 ஆம் தேதி தொடங்கும். இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அஞ்சலகங்களுக்கு வழக்கமான விடுமுறை. 30ஆம் தேதி திங்கள் கிழமை அஞ்சலகங்களுக்கு வேலை நாளாகும். 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை ஆகும்.
ஏப்.1, 2 ஆகிய நாள்களில் பழைய நிதியாண்டு முடிவு மற்றும் புதிய நிதியாண்டு தொடக்கம் சாா்பான செயல்பாட்டிற்காக எந்த ஒரு பண பரிவா்த்தனையும் அஞ்சலகங்களில் நடைபெறாது. அஞ்சலக இன்டா்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளும் செயல்படாது. ஏப். 3ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு விடுமுறை. எனவே விடுமுறை நாள்களில் பொதுமக்கள் தங்களுக்குரிய பணத் தேவையை திட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு அஞ்சலகங்களை முன்னரே அணுகி பணம் செலுத்தல் மற்றும் எடுத்தல் சேவையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏப்.1 மற்றும் 2ஆம் தேதிகளில் தபால் புக்கிங் மற்றும் பட்டுவாடா சேவைகள் வழக்கம் போல் நடைபெறும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.