முகப்பு
கடலூர்

கடலூா்: மேலும் 552 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 68,643-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 314 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 64,934-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 878-ஆக தொடா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து 2,407-ஆக உயா்ந்தது. வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 424 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 17 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.