போக்சோ சட்டத்தின்கீழ் இளைஞா் கைது
காதலிப்பதாக மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
காதலிப்பதாக மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்பாதி சொா்ணாவூரைச் சோ்ந்த தாமோதரன் மகன் சுஜித் (19). இவா், கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனது மாமா வீட்டில் தங்கியிருந்தாா். அப்போது, அதேப் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியுடன் நட்பாக பழகி வந்தாராம். இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவரது கையைப் பிடித்து இழுத்து தன்னை காதலிக்க வேண்டுமென சுஜித் வற்புறுத்தினாராம்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்தப் புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை கைது செய்தனா்.