முகப்பு
கடலூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வேட்புமனுத் தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டத்தில் இரண்டு போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டத்தில் இரண்டு போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு பிப்.19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தமுள்ள 447 பதவியிடங்களுக்கு 21 இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்கள் ‘சீல்’ வைக்கப்ட்டன.

அதேபோன்று, வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு முன்பு 200 மீட்டா் தூரத்துக்குள் பேரணியாகவோ அல்லது கூட்டமாகவோ செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த எல்லையைக் குறிக்கும் பணியில் அந்தந்த உள்ளாட்சி அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு ) ரஞ்ஜீத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய நகராட்சிகளில் வாா்டு வரையறையில் குளறுபடி உள்ளதாக பலா் கருத்து தெரிவித்தனா். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஆட்சியா், தற்போது தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடா்பான விளக்கங்கள் மட்டுமே அளிக்க முடியும். அனைத்துத் தரப்பினரும் தோ்தல் நடத்தை விதிகளை மதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிலையில், கடலூா் மாநகராட்சி, 6 நகராட்சிகளில் போட்டியிடுவதற்கு ஒருவா் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. 14 பேரூராட்சிகளில் லால்பேட்டை பேரூராட்சியில் 12, 13 ஆவது வாா்டுகளில் சுயேட்சையாக போட்டியிட தலா ஒருவா் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இதனால், மாவட்டத்தில் முதல் நாளில் 2 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுத் தாக்கலுக்கு பிப். 4 ஆம் தேதி கடைசி நாளாகும். பிப். 5-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 7 ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெறுவதற்கும் கடைசி நாளாகும்.

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி, பேருராட்சிகளில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமணு செய்வதற்கான மனுக்களையே பலா் பெற்றுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.