30 சவரன் நகைகள் திருட்டப்பட்ட பீரோ. 
கடலூர்

சிதம்பரத்தில் வீட்டு பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே பள்ளிப்படை வெற்றி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளிப்படை வெற்றி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றி நகரைச் சேர்ந்த அப்சல்மஜீத் மகன் ஜாபர் அலி (56). சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

தனது வீட்டில் இணையதள சேவை இல்லாத காரணத்தால் மகள் ரசிகாவின் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேண்டும் என்பதால் சிதம்பரம் வடக்குவீதியில் உள்ள நண்பர் வீட்டில் தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டிக்கொண்டு வந்துள்ளார். 

இரவு வேலை முடிந்த பிறகு நள்ளிரவு 02.15 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவின்  பூட்டை உடைந்து  பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து ஜாபர் அலி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT