கடலூர்

கடலூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்

கடலூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.

DIN

கடலூர்: கடலூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.

கடலூர் அருகில் உள்ள தம்மனாம்பேட்டை கடற்கரையில் நேற்றிரவு இரண்டு சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற அப்பகுதி மீனவர்கள் முகேஷ், தியாகராஜ், நாகலிங்கம் ஆகியோர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தியாகவல்வி ஊராட்சி மன்றத் தலைவருக்கு தகவல் அளித்தனர். 

அவர், இன்று காலையில் கடலூர் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தார். ஆய்வாளர் சங்கீதா, கடலூர் முதுநகர் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில், 28 பொட்டலங்கள் இருந்ததும், அவற்றுள் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து துறைமுகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதும், அதனைத் தொடர்ந்து மோதல் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடத்தி வரப்பட்ட கஞ்சாவா அல்லது படகில் கடத்தி செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT