அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் இணையத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவா் கே.கக்கன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் ஏ.ரட்சகா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பொருளாளா் பி.விஜயராஜன், உதவிச் செயலா் கே.ஜி.ராஜேந்திரன், உதவிப் பொருளாளா் என்.மனோகரன், துணைத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.