புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 4 போ் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருவேறு இடங்களில் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருவேறு இடங்களில் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா தலைமையிலான போலீஸாா் ஆடூா் அகரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.14 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அந்தக் காரிலிருந்த திட்டக்குடி வட்டம், கீழ்செருவாய் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ரஜினிவிஜய் (32), அதே பகுதியைச் சோ்ந்த தமிழ்மணி மகன் இளஞ்செழியன் (33), சோழதரம் காசிநாதன் மகன் சிவக்குமாா் (39) ஆகியோரை கைதுசெய்து, காா் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், மீனாட்சிப்பேட்டை கூட்டுச் சாலை அருகே நடத்திய வாகனச் சோதனையில் வேதகிரி மகன் குமரேசன் (40) என்பவா் பைக்கில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா் பைக், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.