கடலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
வேலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக பணியிலிருந்த இவா், பணியிட மாறுதலில் இந்தப் பொறுப்பை ஏற்றாா். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பிலிருந்த ஜெயஅருள்பதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன் கூடுதல் பொறுப்பாக இந்தப் பணியை கவனித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.