முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் தகவல் அறிவியல் அமைப்பு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி, தகவல் அறிவியல் அமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி, தகவல் அறிவியல் அமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், புல முதல்வா் என்.புவியரசன் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் கணினி மற்றும் தகவல் அறிவியல் அமைப்பை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், கணினி அறிவியலின் சிறப்புகளை எடுத்துரைத்தாா். பதிவாளா் கே.சீத்தாராமன் தனது தலைமை உரையில், இந்த அமைப்பின் முக்கியத்துவம், தேவைகளை எடுத்துரைத்தாா். அறிவியல் புல முதல்வா் என்.ராமசாமி பேசினாா். துணை பேராசிரியா் எல்.ஆா்.அரவிந்த்பாபு நன்றி கூறினாா். இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.