அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!
ப்ளூம்பெர்க் பட்டியலில், குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கௌதம் அதானி முதலிடம்...
புதுதில்லி: துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரையிலான பெருநிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட தொடர் வளர்ச்சியைடுத்து, குஜராத்தைச் சேர்ந்த பெறும் தொழிலதிபரான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கௌதம் அதானியின் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான ஏற்றம், அவரின் நிகர சொத்து மதிப்பை வெகுவாக உயர்த்தியுள்ளது.
கோடீஸ்வரர்கள் தரவரிசையின் அடிப்படையில், கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், 90.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஆசியாவின் 2-வது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி.
Advertisement
Advertisement
தனது பெயரிலான குழுமத்தின் நிறுவனரான அதானி, நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர் மற்றும் தனியார் விமான நிலைய இயக்குநராக உள்ளார். அதே வேளையில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
உலகின் 500 பணக்காரர்களைக் கண்காணித்து, தினசரி புதுப்பிக்கப்படும் பட்டியலில் உள்ள 'ப்ளூம்பெர்க்' கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி தற்போது 19வது இடத்தில் உள்ளார்.
அதானியின் சொத்துகள் பெரும்பாலும், குழுமத்தின் பட்டியலிடப்பட்ட முதல் 10 நிறுவனங்களில் அவர் வைத்திருக்கும் பங்கு முதலீடுகளிலிருந்து பெறப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட எழுச்சியானது, அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் பல பில்லியன் டாலர்களை இணைத்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் பரந்து விரிந்துள்ள தனது முதன்மை குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை ஆதாரமாகக் கொண்ட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, மிதமான வளர்ச்சியையே கண்டுள்ளதால், ஆசியாவின் கோடீஸ்வரர் தரவரிசை பட்டியலை மாற்றியமைத்துள்ளது.
656 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், கோடீஸ்வரர் தரவரிசையில் முதலிடத்திலும், 286 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் லாரி பேஜ்ஜூும், அமேசானின் நிறுவனரான ஜெஃப் பெசாவ்ஸ், 269 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியர்களாக இடம்பெற்றிருப்பது கௌதம் அதானியும், முகேஷ் அம்பானியும் மட்டுமே.
Tycoon Gautam Adani has overtaken fellow Gujarat business czar Mukesh Ambani to become Asia's richest person.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.