அதானி உடனான சந்திப்புக்குப் பின் குஜராத் செல்கிறார் ரூபியோ!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவை இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி சந்தித்துள்ளது குறித்து...
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்தியத் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் டாடா நிறுவனத் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 20) அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை அவர் நேரில் சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், அமைச்சர் ரூபியோவை அதானி நிறுவனத் தலைவர் கௌதம் அதானி மற்றும் டாடா நிறுவனத் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் இன்று (அக். 21) நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், அமெரிக்க அமைச்சர் உடனான இந்தியத் தொழிலதிபர்களின் சந்திப்பு குறித்தும், அவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, மும்பையில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு அமைச்சர் ரூபியோ தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். ஜாம்நகரில் இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு முக்கிய கட்டமைப்புகளை அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் தொழில்துறை வளாகத்தில் அமைந்திருக்கும் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் உள்ளிட்ட எரிசக்திக் கட்டமைப்புகளை அவர் பார்வையிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனந்தரா வனவிலங்கு பூங்காவையும் பார்வையிடும் அமைச்சர் ரூபியோ மீண்டும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெனிசுவேலாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சுத்தகரிப்பு செய்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ரூபியோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian businessmen Gautam Adani and Tata Group Chairman N. Chandrasekaran met and held face-to-face talks with US Secretary of State Marco Rubio.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.