FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உங்கள் அரசைக் கவிழ்க்க எங்களுடன் ரகசியமாக இணையுங்கள்! - கியூபா மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா!

கியூபா அரசைக் கவிழ்க்க அமெரிக்க உளவுப்பிரிவுடன் ரகசியமாகச் செயல்படுங்கள் என அந்நாட்டு மக்களிடம் அமெரிக்கா வலியுறுத்தல்...

20 வினாடிகள் முன்பு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ - கோப்புப் படம்
பகிர்:

கியூபாவின் இடதுசாரி அரசைக் கவிழ்க்க அமெரிக்க உளவுத்துறை உடன் ரகசியமாகச் செயல்படுங்கள் என கியூபா மக்களிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான வலதுசாரி அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கியூபாவில் மாற்றத்தை விரும்பும் மக்கள் அமெரிக்காவின் உளவுப்பிரிவான (சிஐஏ) உடன் ரகசியமாக இணைந்து செயல்படுங்கள் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (அக். 24) பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“கியூபாவில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் மக்களுக்கு இதுவே சரியான தருணம்.

நிறைவேறாத வாக்குறுதிகள், ஊழல் மற்றும் ஒரு சிலருக்கான சலுகை பெற்ற வாழ்க்கை ஆகியவற்றால் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு இடையே, சிஐஏ-வுடனான ஒரு ரகசியக் கூட்டணியின் மூலம் நீங்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, கியூபா நாட்டின் மீது எரிசக்தி தடையை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டுக்குக் கொண்டுச் செல்லப்படும் கச்சா எண்ணெய் கப்பல்களை முடக்கி வருகிறது. இதனால், கியூபாவில், மின்சாரம், எரிசக்தி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

மேலும், ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கடற்படைக் கப்பல்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

US Secretary of State Marco Rubio has advised the Cuban people to work secretly with US intelligence to overthrow Cuba's leftist government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments