FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா வந்தார் அமெரிக்க அமைச்சர் ரூபியோ! ஜெய்சங்கர், ஃபட்னவீஸ் உடன் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மும்பை வந்தடைந்தார்...

20 அக்டோபர் 2026, 2:58 pm IST
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ இந்தியா வந்தார்... - எக்ஸ்
பகிர்:

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இந்திய வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று (அக். 20) இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவரையும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவையும் இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.

இந்தப் பயணத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும் ரூபியோ, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மும்பையில் நடைபெறும் ஃபிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரூபியோ தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை சந்திக்கும் அமைச்சர் ரூபியோ, அந்தச் சந்திப்புக்குப் பின் மும்பையில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குச் செல்வார் என அவரது பயணத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழாண்டில் (2026) மட்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ இந்தியாவுக்கு 2 ஆவது முறையாக வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

US Secretary of State Marco Rubio has arrived in India on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments