பங்குச் சந்தைகளில் 5-ஆவது இடம்! அமெரிக்கா, ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
உலகின் பெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா முன்னேறியது குறித்து...

உலகின் பெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE), கடந்த செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய தேசிய பங்குச் சந்தையின் பங்குகளின் விலை உயர்ந்து, ஏற்றம் கண்டு வருகிறது.
தற்போதைய சந்தை தரவுகளின்படி, தேசிய பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் சுமார் 59.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஹாங்காங் பங்குச் சந்தையையும் (58.1 பில்லியன் டாலர்), அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையையும் (57.7 பில்லியன் டாலர்) இந்திய தேசிய பங்குச் சந்தை பின்னுக்குத் தள்ளியது.
Advertisement
Advertisement
பெரிய பட்டியலிடப்பட்ட சந்தைகளில் முதலிடத்தில் சிஎம்இ குரூப் (111.05 பில்லியன் டாலர்), இரண்டாம் இடத்தில் இன்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் (95.50 பில்லியன் டாலர்), மூன்றாவதாக டாய்ச் போர்ஸ் (65.00 பில்லியன் டாலர்), நான்காம் இடத்தில் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப் (60.30 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன. இவற்றைத் தொடர்ந்து, 59.7 பில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை உள்ளது.